எம்மைப் பற்றி

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1933/13 ஆம் இலக்க 2015.09.21ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு தாபிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இந்த அமைச்சின் கீழ் கொள்ளப்படுகின்ற நிறுவனங்கள் பின்வவருமாறாகும்

 • தபால் திணைக்களம்
 • முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம்

அதற்கமைய அமைச்சின், நோக்கு, செயற்பணி, அமுல்படுத்த வேண்டிய சட்டங்கள், நோக்கங்கள் மற்றும் செயற்பணி ஆகியன பின்வருமாறாகும்.

எமது நோக்கு
மிகச்சிறந்த,வினைத்திறன்மிக்கதபால்சேவையும்,இஸ்லாமியசமய மற்றும் கலாசாரஅலுவல்களை மேம்படுத்துவதும்

எமது செயற்பணி
நம்பகமானதும், உயர்தரம்மிக்கதுமான தபால் சேவையை தாங்கிக்கொள்ளக்கூடிய விலையில் பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதும், இலங்கைவாழ்முஸ்லிம்சமுதாயத்தின் சமய மற்றும் கலாசார அலுவல்களை மேம்படுத்துவதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பதும்.

அமுல்படுத்த வேண்டிய சட்டங்கள்

 • முத்திரைக் கட்டளைச் சட்டம் (1909 இன் 22 ஆம் இலக்கம்)
 • அஞ்சல்அலுவலககட்டளைச் சட்டம் (1908 இன் 11 ஆம் இலக்கம்)
 • முஸ்லிம் பள்ளிவாசல், நம்பிக்கைப் பொறுப்புக்கள் அல்லது வக்புகள் சட்டம் (1956 இன் 51 ஆம் இலக்கம்)

நோக்கங்கள்:

 • தபால் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விடயங்கள் சம்பந்தமான கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை தயார் செய்தல்.
 • செலவினத்தைக் குறைத்துபொதுமக்களுக்குமிகவும் இலாபகரமானதும்,வினைத்திறன்மிக்கதும், நட்புறவானதுமானதபால்சேவையைவழங்குதல்.
 • நவீனதொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி பூகோள போக்குகளுடன்ஒத்திசைந்தவகையில்தபால்சேவையினைவிரிவாக்கல்.
 • தபால்சேவையின்தரம், நியமங்கள் மற்றும் மேம்படுத்தலை உறுதிசெய்தல்.
 • உள்நாட்டுத் தபால் தொடர்பாடல் சேவைக்குச் சமாந்தரமாக நிதிசார் சேவை வசதிகளை கிராமிய மட்டம் வரை விஸ்தரித்தல்.
 • முகவராண்மை சேவைகளை ஆற்றும் பரப்பெல்லையை விஸ்தரித்து தபால் அலுவலகங்களை மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு சேவைகளையும் ஆற்றுகின்ற அலகொன்றாக வலுவூட்டல்.
 • அங்கீகரிக்கப்பட்ட முத்திரைக் கொள்கைக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • நினைவு முத்திரைகள் மற்றும் அது சம்பந்தமான ஆகக்கங்களை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் தனித்துவத்தையும், பெருமையையும் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லல்.
 • உலக தபால் சங்கத்தின் அங்கத்தவ நாடு என்ற வகையில் அதன் ஒழுங்குறுத்தலுக்கு அமைவாக இலங்கையின் தபால் சேவையை சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் சர்வதேச தபால் சேவைகளை மேம்படுத்தல்
 • முஸ்லிம் பள்ளிவாசல்கள், இஸ்லாமிய சமய நிறுவனங்கள்,அறக்கட்டளைநிதியங்கள்என்பவற்றின்சொத்துக்களை நிருவகித்தல்.
 • இஸ்லாமியமார்க்கக்கல்வி, இஸ்லாமியகலாசாரஅம்சங்களை போசிப்பதும், மேம்படுத்துவதும்.
 • சகல இஸ்லாமியர்களுக்கும் ஒரு முறையேனும் ஹஜ்கடமையினைநிறைவேற்றச்செல்வதற்காக மிகவும் நியாயமான முறையியலை ஏற்படுத்துவதற்காக அரச தலையீட்டை உறுதி செய்தல்.
 • மீளாதுன் நபி வைபவத்தை நோக்காகக் கொண்டு முஸ்லிம் சமய, கலாசார மற்றும் சமுதாய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தல்.
 • ரமழான் நோன்பினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுத்தல்.

செயற்பணிகள்

 • தபால் திணைக்களம் மற்றும் முஸ்லிம்சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் சம்பந்தமான கொள்கைகளைத் தயார் செய்வதும், அமுல்படுத்துவதும்
 • அமைச்சின் கீழுள்ள சகல திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களையும் வழிநடாத்துவதும், கண்காணிப்புச் செய்வதும்
 • தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கைகள் தொடர்பாக உரிய கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் தொடர்பான சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணிவருவதும், அத்தொடர்புகளை மேம்படுத்துவதும்.
 • தகவல் தொழில்நுட்பச் துறையின் அபிவிருத்திக்கு இசைவாக திணைக்களத்தின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளை அமுல்படுத்தல், வழிநடாத்தல் மற்றும் கண்காணிப்புச் செய்தல்.
 • சர்வதேச தரநியமங்களுக்கு அமைவாக தபால் சேவைகளைப் பேணிவருவதும், வழிநடாத்துவதும்.
 • அதிவேக தபால் மற்றும் பொதிச் சேவைகள் மற்றும் சகல நிதிசார் சேவைகளையும் தபால் அலுவலகக் கட்டமைப்பின் ஊடாக விஸ்தரிப்பதை வழிநடாத்துவதும், கண்காணிப்புச் செய்வதும்.
 • அரசாங்க மற்றும் தனியார் துறையின் பங்கேட்பின் ஊடாக வினைத்திறனும், உற்பத்தித்திறனும், தரமும்மிக்க தபால் சேவையைப் பொது மக்களுக்குப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.
 • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, நிதிப் பரிமாற்றல் சேவைகளை மேம்படுத்தல், வழிநடாத்தல் மற்றும் கண்காணிப்புச் செய்தல்.
 • உலக தபால் சங்கம் மற்றும் ஆசிய பசுபிக் தபால் சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதான அரச ஒருங்கிணைப்பாளர் என்றவகையில் தபால் திணைக்களத்தினை வழிநடாத்துவதும், கண்காணிப்புச் செய்வதும்.
 • தபால் மற்றும் உபதபால் அலுவலக கட்டமைப்பின் ஊடாக காசுப் பரிமாற்றம், காப்புறுதிச் சேவைகள் மற்றும் வங்கி மற்றும் ஏனைய நிதிச் சேவைகளை ஆரம்பிப்பதும், தற்போது காணப்படுகின்ற முகவராண்மைச் சேவைகளை மேம்படுத்துவதை கண்காணிப்புச் செய்வதும்.
 • முத்திரைக் கொள்கைக்கு இவைசாக உள்நாட்டுத் தேவைகளுக்குப் பொருத்தமானவாறு தபால் முத்திரை மற்றும் வருமான முத்திரைகளை வடிவமைத்தல், அச்சிடல், வெளியிடல், சந்தைப்படுத்தல் மற்றும் இருப்புக் கட்டுப்பாட்டை நல்ல முறையில் பேணிவருவதைக் கண்காணிப்புச் செய்தல்.
 • நினைவு முத்திரைகள் மற்றும் அது தொடர்பான ஆக்கங்களை அவற்றின் தரத்தைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைத்தல், அச்சிடல், வெளியிடல் மற்றும் சந்தைப்படுத்துவதை வழிநடாத்துவதும், கண்காணிப்புச் செய்வதும்.
 • வக்புசட்டத்தினைநடைமுறைப்படுத்துவதும், வக்பு சபையின் நடவடிக்கைகளை கண்காணிப்புச் செய்வதும்
 • முஸ்லிம்சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மீலாதுன் நபி வைபவத்திற்கென திரண்ட நிதியிலிருந்து ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள நிதியை முஸ்லிம் சமய நிறுவனங்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தல், வழிநடாத்தல் மற்றும் கண்காணிப்புச் செய்தல்.
 • புனிதரமழான்மாதத்தில்முஸ்லிம்நாடுகளில்இருந்துஅன்பளிப்பாகஎமதுநாட்டுக்குகிடைக்கும் பேரீத்தம்பழங்களை சகல முஸ்லிம் குடும்பங்களையும் உள்ளடக்கும் வகையில்மாவட்டமட்டத்தில்விநியோகித்தல், வழிநடாத்தல் மற்றும் கண்காணிப்புச் செய்தல்.
 • ஹஜ் யாத்திரை தொடர்பாக சவுதி அரசாங்கத்துடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்புச் செய்தல், ஹஜ் யாத்திரையை ஒழுங்கு செய்யும் அமைப்புக்களை தெரிவு செய்தல்,ஹஜ் பங்கினை (Quota)முறையாக பகிர்ந்தளித்தல், வழிநடாத்தல் மற்றும் கண்காணிப்புச் செய்தல்.