செயலாளர் அவர்கள்

செயலாளரின செய்தி

பிரித்தானிய பேரரசின் மற்றொரு காலனித்துவ நாடாகக் காணப்பட்ட இலங்கையில் அரச நிருவாக நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு வெளிநாட்டவர்களினால் அறிமுகம் செய்யப்பட்ட தபாலானது இன்று இலங்கையிலுள்ள மக்களுக்கு அத்தியாவசியமான சேவைகளை ஆற்றிவருகின்ற நிறுவமொன்றாக அதன் நடவடிக்கைகள் மாற்றமடைந்துள்ளதென்று குறிப்பிட முடியும்.

காலத்துடன் இணைந்து மற்றும் தொழில்நுட்ப மறுமலர்ச்சியை அடுத்து தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பாரியதொரு அடியெடுத்து வைத்து முன்னேறிச் சென்று இலங்கைத் தபால் மூலம் தேசத்திற்கு ஆற்றப்படுகின்ற சேவைகளில், தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பல்வேறுபட்ட நிதிச் சேவைகள், காப்புறுதிச் சேவைகள், மக்களுக்கான பல்வேறுபட்ட தேவைகள் அனைத்தையும் ஒரே கருமபீடத்தினூடாக ஆற்றுவதற்கும், அவற்றை நாடு முழுவதிலும் பரந்துள்ள சேவை வலையமைப்பின் ஊடாக வழிநடாத்துவதற்கும் ஆற்றல் கிடைத்துள்ளதன் மூலம் இலங்கைத் தபாலானது பாரியதொரு நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் கைகோர்த்துக் கொண்டு மக்களுக்கு ஏற்றதொரு சிறந்த தபால் சேவையை உருவாக்கும் தேசியக் கொள்கையை விளைத்திறன்மிக்கவாறு நிறைவேற்றிக் கொள்வதற்கு நவீன கருவிகள் சகிதம் புத்தெழுச்சி பெற்றுவருகின்ற நூதன தொடர்புசாதனத் துறையின் அரசதுறை சேவை வழங்குனர் என்ற வகையில் காணப்படுகின்ற பொறிமுறையை வீட்டுக்கு வீடு பெற்றுக் கொடுத்து நகர்ப்புற, பகுதியளவிலான நகர்ப்புற மற்றும் கிராமிய சமுதாயத்தினர் அனைவருக்கும் ஒரே சமமான சேவை இலங்கைத் தபாலின் மூலம் மாத்திரமே ஆற்றப்படுகின்றது.

பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றிவருகின்ற இலங்கைத் தபால் சேவையை ஒழுங்குறுத்தும் பணிகளை மேற்கொகின்ற அமைச்சிடம் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்களை மேம்படுத்தும் சேவைகளை ஆற்றுவதையும் ஒழுங்குறுத்தும் பொறுப்புக்களும் கையளிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டின் மக்கள் மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சு அதன் இணையத்தளத்தை ஒழுங்குபடுத்துகின்ற இந்த சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கக் கிடைத்ததை தனிப்பட்ட வகையில் நான் பெற்ற வெற்றியாகக் கருதுகின்றேன்.

பல்லினத் தன்மையை மதிக்கின்ற சகலருக்கும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் இணையத்தள்தை விளைதிறன்மிக்கவாறு பயன்படுத்த வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆர்.எம்.டி.பி மீகஸ்முல்ல
செயலாளர்,
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு.