Hon. Minister

கௌரவ அமைச்சரின் செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள இலங்கை சமூகத்தின் சகலரினதும் வீடு வீடாகச் சென்று அளப்பரிய சேவைகளை ஆற்றிவருகின்ற இலங்கைத் தபால் இந்நாட்டின் தொடர்புசாதன வரலாற்றின் ஆரம்பமாகக் கருதப்படுகின்றது. இலங்கைத் தபால் சேவையை இந்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் பூகோளக் கிராமத்தின் மற்றொரு யன்னலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிகச் சிறந்த சேவையை ஆற்றிவருகின்ற நிறுவனமாகக் குறிப்பிடுவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

காலனித்துவ ஆட்சிக் காலத்திற்கும் முற்பட்ட காலம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உள்நாட்டுத் தபாலானது அரச நிறுவாகத்தின் ஆரம்பப் பங்காளியாக பண்டைய கால தகவல்களின் மூலம் உறுதி செய்யப்படுவதுடன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மற்றும் அதன் நியதிச்சட்டங்களுடன் கைகோர்த்துக் கொண்டு உலகம் முழுவதிலும் சுமார் இருநூறு நாடுகளுடன் தொடர்புகளைக் பேணி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் தொடர்பாடலின் முன்னோடி என்ற வகையில் இலங்கைத் தபாலை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பத்தின் துரித முன்னேற்றத்துடன், நவீன தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கியதாகச் செயற்படுதவ்றகு சாவ்தேச ரீதியில் இலங்கை அடையப்பெற்றுள்ள மற்றொரு வெற்றியாகவே இதனக் கருதுகின்றேன்.

அண்மைக் கால வரலாற்றில் இலங்கையில் இடம்பெற்ற பாரிய சனநாயக மாற்றத்தின் மூலம், பல்வேறு சமயங்களையும் பின்பற்றுகின்ற பலதரப்பட்ட இனங்கள் ஒற்றுமையாக வாழும் உலகின் ஒரே நாடென்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிப்படுத்தியுள்ள இலங்கையானது, நல்லாட்சி மற்றும் நல்லிணக்கப் பாதையில் இலங்கையை ஒன்றுதிரட்டி தபால் சேவைக்கு மேலதிகமாக இஸ்லாமிய சமய அலுவல்களையும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பையும் ஒன்றிணைக்கும் வகையில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பல்லினத்தன்மையை மதிக்கின்ற ஒவ்வொரு பிரசைகள்கும் தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு சேவையாற்றல் மற்றும் சேவை பெறுவதற்கான உரிய உரிமையைப் பெற்றுக் கொடுத்து, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் இந்த அமைச்சின் இணையத்தளத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

எம்.எச்.ஏ. ஹலீம்
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்